பீகாரின் நவாடா மாவட்டத்தில், மனம் பதறும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இரவு நேரத்தில் ஒரு இருட்டான சாலையில், மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும், ஒரு ஸ்ட்ரெட்சரை தள்ளிக்கொண்டே செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களது தாய், உடல் நலக்குறைவால் அக்பர்பூரில் உள்ள பிரைமரி ஹெல்த் செண்டருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.