சென்னை சென்ட்ரல் விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நரசாபூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நரசாபூருக்கு கிடைக்கும் முதல் வந்தே பாரத் ரயில் சேவை இதுவாகும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், பிற்பகல் 2.10 மணிக்கு நரசாபூர் ரயில் நிலையத்தை அடையும். திரும்பிச் செல்லும் ரயில் பிற்பகல் 2.50 மணிக்கு நரசாபூர் நிலையத்திலிருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 11.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.