உடல் நலனில் அக்கறை கொள்ளும் பலர் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதையும், எவ்வளவு கலோரிகள் சாப்பிடுகிறோம் அதற்கு உடற்பயிற்சி எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அதை விளக்கும் வகையில், நம்முடைய விருப்ப உணவுகளை சாப்பிட்ட பின் எவ்வளவு நேரம் நடக்க வேண்டியிருக்கும் என மும்பையைச் சேர்ந்த எலும்பு அறுவை சிகிச்சை வல்லுநர் மனன் வோரா கூறுகிறார்.