ஒரு சிறிய ஓவியம்... ஆனால் அதன் மதிப்பு – நூறு கோடி ரூபாய்க்கும் மேல்! முகலாய காலத்தில் உருவாக்கப்பட்ட ‘பசாவான்’ என்ற ஓவியரின் மினியேச்சர் ஓவியம், இப்போது உலக சாதனை படைத்திருக்கிறது. லண்டனில் நடந்த கிரிஸ்டீஸ் ஏலத்தில், இந்த அரிய முகலாய கால ஓவியம் 119 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.