மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில், ஒரு மனிதர் பாம்புடன் நகைச்சுவையாக பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சாலையோரத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒரு நாகப்பாம்பின் அருகில், அந்த நபர் பயமில்லாமல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை காணலாம். நாகப்பாம்பும் தீயின் அருகே அமைதியாக அமர்ந்துள்ளது.