மொபைல் போன் சார்ஜ் செய்யும் போது நாம் செய்யும் சில தவறுகள், பெரும் விபத்து வரை கொண்டு செல்லக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதன்படி, ஒரே சாக்கெட்ல் இரண்டு போன்களைக் இணைப்பதால், அதிக வெப்பம் உருவாகி போன் வெடிக்கும் அபாயம் ஏற்படும். அதேபோல், சார்ஜர் மேல் போனை வைத்திருத்தல், இரண்டு போன்களை ஒன்றின் மேல் வைத்திருப்பதால் அதிக வெப்பம் ஏற்பட்டு பாம் போல் அவை வெடிக்கலாம். ஓரிஜினல் சார்ஜருக்கு பதிலாக லோக்கல் அல்லது டூப்ளிகேட் சார்ஜர் பயன்படுத்துவதால் பேட்டரி சேதமடைந்து, போன் வெப்பமடைந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.