முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு நாட்டில், பணக்காரர்களில் சிலர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். பாகிஸ்தானில் 52 லட்சத்திற்கும் அதிகமான இந்துக்கள் வசித்து வருகின்றனர். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.17 சதவீதமாகும். நாட்டின் தொடர்ச்சியான நிதிச் சவால்கள் இருந்தபோதிலும், சில குறிப்பிடத்தக்க ஆளுமைகள் தங்களது முத்திரையை பதித்துள்ளனர்.