மும்பையில் சாதாரண யாசகராக வளம் வரும் ஒரு நபர், உண்மையில் பல கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம், மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் தான் அந்த இந்தியாவின் கோடீஸ்வர யாசகர். இவர் தினமும் தான் யாசகமாக பெறும் பணத்தின் மூலமே கோடிக்கணக்கான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு தோராயமாக ரூபாய் ஏழரை கோடி இருக்கும் என மிதப்பிடப்பட்டுள்ளது. அதோடு, வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை வாடகைக்கு விடுத்து அதன் மூலமும் அவர் வருமானம் பார்த்து வருகிறார்.