அமெரிக்கா முழுவதும் அமைதியைப் பரப்பும் நோக்கில் புத்த பிக்குகள் ஒரு அபூர்வமான நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நீண்ட பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் அவர்களுடன் சேர்ந்து நடப்பது அலோகா என்ற அமைதியான, விசுவாசமான ஒரு நாய். தற்போது சமூக வலைதளங்களில் அலோகா பலரின் மனதை கவர்ந்து வருகிறது. ‘Walk for Peace’ என்ற பெயரில் நடைபெறும் இந்த நடைபயணம் தற்போது ஜார்ஜியா மாநிலம் வழியாக சென்று கொண்டிருக்கிறது. நெடுஞ்சாலைகளில் பிக்குகள் மட்டுமல்ல, அவர்களுடன் அமைதியாக நடக்கும் அலோகாவும் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.