அமெரிக்காவில் போதுமான திறமையானவர்கள் இல்லை என்றும் சில துறைகளில் பணியாற்ற வெளிநாடுகளில் இருந்து திறமையானவர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வர வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் எச்-ஒன்பி விசா பெற ஆண்டுதோறும் என்பத்தி எட்டு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். மேலும், எச்-ஒன்பி விசா தொடர்பாக பல புதிய விதிகளையும் அறிவித்தார். இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நம்பினார். எனினும், தற்போது அந்த முடிவில் இருந்து டிரம்ப் பின்வாங்கி விட்டதாக தெரிகிறது.