மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும், அதே திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த அமைப்பு ஒரு சூறாவளி புயலாக வலுப்பெற்றால், அதற்கு “சென்யார்” என்று பெயரிடப்படும்.