நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை செய்பவர்களுக்கு, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களுக்கான அபாயம் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என, சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக, லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்துச் சேர்ந்த மருத்துவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.இந்த ஆய்வு முடிவுகள் 'பப்ளிக் ஹெல்த்' என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது