தென் கொரிய கே-பாப் கலாச்சாரத்தில் பிரபலமான பாடகி ஹ்யூனா, இவர் ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைத்ததன் விளைவாக, மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே கீழே சரிந்தார். ஹ்யூனா சீயோலில் நடைபெற்ற ‘வாட்டர்பாம் மக்காவு’ இசை விழாவில் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி தனது பபுள் பாப்! பாடலை பாடிக் கொண்டிருந்த போது, திடீரென மேடையில் மயக்கம் ஏற்பட்டு சரிவடைந்தார். பின்னர் சமூக ஊடகத்தில் வருத்தம் தெரிவித்த அவர், என்ன நடந்தது என நினைவில் இல்லை, என்னால் சரியாக செயல்பட முடியவில்லை என்று உணர்வதாக பதிவிட்டிருந்தார்.