ஜப்பான், மீண்டும் உலகையே அதிர வைத்திருக்கிறது. 3 கோடி ரூபாய் மதிப்புள்ள, குளிப்பாட்டும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆம், சொல்லப்போனால், இந்த இயந்திரம், உங்களை 15 நிமிடத்திலேயே முழுமையாக சுத்தப்படுத்தும். மிராய் நிங்கேன் சென்டாக்கி, என்று அழைக்கப்படும் இந்த இயந்திரம், மனித வாஷிங்மெஷின் என அழைக்கப்படுகிறது. ஒரு சிறிய டப்பில் நீங்கள் படுத்துக்கொண்டால் போதும். பின்னர் அந்த டப் மூடப்பட்டு, அதிவேகமாக நீர் உங்கள் மீது வேகமாக விழும், சோப்பு போட்டு, தேய்த்து குளிக்க வேண்டாம். இந்த இயந்திரமே, உங்களை முழுமையாக குளிப்பாட்டும். மேலும், பயோமேட்ரிக் ஸ்கேன் மூலம், உங்கள் உடல் நிலையை புரிந்துகொண்டு அது உங்களை குளிப்பாட்டும் முறையை மாற்றும்