இந்தியாவில் கடலுக்கடியில் ரயில் நிலையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையமானது மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் லட்சிய மும்பை அகமதாபாத் அதிவேக ரயில் பாதையில் ஒரு பகுதியாக கட்டப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையமானது தரை மட்டத்திலிருந்து 32.5 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் மிக ஆழமான நிலத்தடி ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன. மேலும், இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்காக கடலுக்கு அடியில் சுரங்க பாதைக்கான நுழைவு வாயிலாகவும் இது செயல்பட உள்ளது.