ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய புவித்தட்டு, தற்போது திபெத்தின் கீழ் இரண்டாக பிளந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது சாதாரண பிளவு அல்ல, விஞ்ஞானிகள் இதை “டெலமினேஷன்” என்கிறார்கள். அதாவது, பூமியின் உள்புறத்தில் இந்திய புவித்தட்டு இரண்டு அடுக்குகளாக பிளந்து, அதன் அடிப்பகுதி ஆழமாக மூழ்கியும், மேல்பகுதி திபெத்தின் கீழ் வடக்கு திசையில் நகர்ந்தும் வருகிறது. இந்த அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள், 2023 ஆம் ஆண்டு அமெரிக்க புவியியல் சங்கக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.