கனடாவில் படித்து வந்த 20 வயதுடைய இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிவாங்க் என்ற இந்திய மாணவர், கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 2025 டிசம்பர் 23ஆம் தேதி பிற்பகல் 3.34 மணியளவில், நடந்ததாக டொரண்டோ காவல்துறையிர் தெரிவித்தனர்.