இந்திய ரயில்வே தற்போது, பயணிகளுக்காக, பல வசதிகளை கொண்டு வந்துள்ளது. அதில் ‘லோயர் பெர்த் ரிசர்வேஷன் ரூல்ஸ் என்ற விதி முக்கியமான ஒன்று. ஆனால் பலருக்கும், நான் லோயர் பெர்த் தேர்வு பண்ணினாலும், எப்படி மேல் பெர்த் கிடைக்கிறது என்ற குழப்பம் இருக்கும். இதற்குக் காரணம், சீட் அலாட்ட்மெண்ட் விதிகள் தான். ரயில்வே கம்ப்யூட்டர் ரிசர்வேஷன் முறையில், மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு லோயர் பெர்த் தானாக வழங்கப்படும். அதாவது, டிக்கெட் புக்கிங் நேரத்திலேயே லோயர் பெர்த் காலியாக இருந்தால், அது நேரடியாக அவர்களுக்கே ஒதுக்கப்படும்.