இந்தியாவின் சைபர் பாதுகாப்பு நிறுவமான சிஇஆர்டி, வாட்ஸ்அப்பின் டிவைஸ் லிங்கிங் அம்சத்தில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த குறைபாட்டை பயன்படுத்தி, ஹேக்கர்கள் ஒரு வாட்ஸ்அப் கணக்கை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “கோஸ்ட் பேரிங்” என பெயரிடப்பட்ட இந்த புதிய சைபர் தாக்குதல் முறையின் மூலம், கடவுச்சொல் அல்லது சிம் கார்டு மாற்றம் இல்லாமலேயே வாட்ஸ்அப் கணக்கை கைப்பற்ற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.