இந்திய கடற்பரப்பில் அனுமதியற்ற எண்ணெய் வர்த்தகத்திற்கு எதிராக கடுமையான எச்சரிக்கையாக, அமெரிக்க தடைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று எண்ணெய் டாங்கர் கப்பல்களை இந்தியா தடுத்து வைத்துள்ளது. ஸ்டெல்லர் ரூபி, அஸ்பால்ட் ஸ்டார், அல் ஜஃப்சியா ஆகிய கப்பல்கள் மும்பை கடற்கரைக்கு அருகே பிடிபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.