2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. வருகின்ற 2026 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டி எதுவும் அறிவிக்கப்படவில்லை. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஐசிசி இந்த முறை இந்தியாவையும் பாகிஸ்தானையும் வெவ்வேறு குழுக்களில் பிரித்து வைத்துள்ளது. முதல் போட்டி வருகின்ற 2026 ஜனவரி 15ம் தேதி இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், அமெரிக்கா 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையே நடைபெறும்.