இன்றைய தலைமுறை மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாக கண்கள் உலர்ந்து போகும் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் ஒரு சிறிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த பாதிப்பு தொடர்ந்தால், கண்களில் மிகுந்த அசௌகரியம், லேசான வலி மற்றும் சில நேரங்களில் மங்கலான பார்வை கூட ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியப்படும் விதமாக, நமது அன்றாட பழக்கவழக்கங்கள் பலவும் உலர் கண்களுக்கு காரணமாகின்றன என கூறப்பட்டுள்ளது.