மழைக்காலங்களில் மொபைல் சிக்னல்களில் பாதிப்பு ஏற்படுவது தொடர்கிறது. புயல், வெள்ளம் போன்ற அவசரக் காலங்களில், இதுபோன்று சிக்னல் பாதிக்கப்படுவதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை எப்படி தவிர்ப்பது என பார்க்கலாம். மழைக்காலங்களில் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை என்றால், மொபைலில் பிளைட் மோடில் 10 முதல் 15 வினாடிகள் வைத்திருந்து, மீண்டும் பயன்படுத்தலாம்.