இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வலை பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில், முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. 18 வயதான விக்கெட் கீப்பர் ராபி போமன் அடித்த ஷாட், நேராக பென் ஸ்டோக்ஸின் முகத்தைத் தாக்கியுள்ளது. அந்த பந்து, ஸ்டோக்ஸின் வலது பக்க முகத்தில் பலமாக பட்ட நிலையில் அவர் தடுமாறி கீழே விழுந்ததார்.