பிரபல இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமான ‘வாரணாசி’, சர்வதேச அளவில் புதிய சாதனையை படைக்க உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு டீசர், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற Le Grand Rex திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. இந்திய திரைப்படங்களில், விளம்பர டீசரை இந்த புகழ்பெற்ற திரையரங்கில் வெளியிடும் முதல் படமாக ‘வாரணாசி’ மாறுகிறது. இந்த சிறப்பு திரையிடல், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த தகவலை, பிரான்ஸில் இந்திய திரைப்படங்களை விநியோகிக்கும் ஆன்னா ஃபிலிம்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.