கிழக்கு இமயமலைப் பகுதிகளின் உயரமான, கடினமான நிலப்பரப்பில் வளர்கிறது ‘சிக்கிம் சுந்தரி’ என அழைக்கப்படும் அரிய தாவரம். Rheum nobile என்ற அறிவியல் பெயருடைய இந்த தாவரம், அதன் விசித்திரமான வாழ்வுச் சுழற்சிக்காக தாவரவியலாளர்களையும் இயற்கை ஆர்வலர்களையும் ஈர்த்து வருகிறது. வாழ்க்கையின் பெரும்பகுதியில், நிலத்துக்கு அருகில் இலைகள் கொண்ட ஒரு சாதாரண வட்ட வடிவமாக இருக்கும் இந்த தாவரம், பல ஆண்டுகள் சக்தியை சேமித்து வைக்கிறது. ஏழு முதல் 30 ஆண்டுகள் வரை கழித்த பின், திடீரென இரண்டு மீட்டர் உயரம் வரை மேலெழுந்து, குறுகிய காலத்தில் மலர்ந்து, விதைகளை வெளியிட்டு தனது வாழ்வை நிறைவு செய்கிறது.