வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக தேன், வெல்லம், பழுப்பு சர்க்கரை பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல என்று கல்லீரல் நிபுணர் சைரியாக் அபி பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். தி லிவர் டாக்ட் என அழைக்கப்படும் அவர் கடந்த டிசம்பர் 23 அன்று வெளியிட்ட பதிவில், வெள்ளை சர்க்கரை, தேன், வெல்லம், பிரௌன் சுகர் இவையனைத்தையும் நமது கல்லீரலும், கணையமும் ஒரே மாதிரியாகவே செயல்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். வெள்ளை சர்க்கரைக்கிற்கு மாற்றாக தேன் அல்லது வெல்லம் பயன்படுத்துவது ஆரோக்கிய தீர்வு அல்ல என்றும், மொத்தமாக சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவைக் குறைப்பதே முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.