மகாராஷ்டிராவில் நடந்த ஒரு வினோத சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. எனது மனைவியை கண்டுபிடிக்க உதவுங்கள், உங்கள் உதவியை நான் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என, பிரபல அரசியல் தலைவர் சரத் பவாரிடம், ஒருவர் கடிதம் கொடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில், கடந்த நவம்பர் 8 ஆம் தேதி, விவசாயிகளுடன் கலந்துரையாடிய சரத் பவார், அவர்களிடமிருந்து மனுக்கள் பெற்றார். அதில் ஒரு மனு மட்டும், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு இளைஞர் தன்னுடைய திருமண பிரச்சனையைச் சொல்லி, எனக்கு வயசாகி வருகிறது. எனக்கு திருமணமே நடக்காதோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு ஒரு மனைவியை கண்டுபிடிக்க உதவுங்கள்.