கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியாவிற்கும் மாடல் மஹேகா சர்மாவிற்கும் இடையிலான உறவு தற்போது ரசிகர்கள் மத்தியில் முக்கிய விவாதப் பொருளாக உள்ளது. இருவரும் ஒன்றாக அமர்ந்து பூஜை செய்யும் பழைய வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், இருவரும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து, பூசாரிகள் நடத்திய விழாவில் கைகளை கூப்பி பிரார்த்தனை செய்கிறார்கள்.