அமெரிக்காவின் H1B விசா விதிகளில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றம், இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் இந்திய வம்சாவளி குடும்பங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, அதாவது Department of Homeland Security, இனி H1B விசா தேர்வு முறையில், முழுமையாக, சம்பள அடிப்படையிலான தேர்வு முறை அமல்படுத்தப்படும் என உறுதியாக தெரிவித்துள்ளது.