காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 'தங்க பல்லி' மாயமானதாக சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதோடு கோவிலில் இருக்கும் வெள்ளி பல்லி, தங்க பல்லி’ சிலைகளையும் தரிசனம் செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், அங்கு வந்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ‘தங்க பல்லி’ மாயமாகிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.