சீனாவின் ஷாங்காய் நகரில் ஏற்பட்ட பெரும் பள்ளம் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷாங்காயின் மின்ஹாங் மாவட்டத்தில் கிசின் சாலை மற்றும் லியான் சாலை சந்திப்பில் இந்த சம்பவம் நடைபெற்றது. மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த பகுதியில் திடீரென நிலத்தடி நீர் புகுந்ததால், சாலை ஒரு பகுதி தாறுமாறாக இடிந்து பெரிய பள்ளமாக மாறியது.