Florida Python Challenge என்ற வினோதமான போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மீண்டும் நடைபெற உள்ளது. ஜூலை 10 முதல் 19 வரை நடைபெறும் இந்த 10 நாள் போட்டி, எவர்க்ளேட்ஸ் பகுதியில் வேகமாக பரவி வரும் பர்மிஸ் மலைப்பாம்புகளை கட்டுப்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. Burmese python வகை பாம்புகள் தென்கிழக்காசியாவைச் சேர்ந்தவை. 1970 மற்றும் 1980களில் செல்லப்பிராணி வர்த்தகம் மூலம் புளோரிடாவுக்கு கொண்டு வரப்பட்ட இப்பாம்புகள், பின்னர் காட்டில் விடப்பட்டதால் பெருமளவில் பரவின.