மத்திய தாய்லாந்தில் உள்ள ஒரு உணவகம் ஒரு தனித்துவமான அனுபவத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர். அதாவது, உணவகத்தில் வெள்ளநீர் புகுந்த நிலையில், வெள்ளநீருக்கு மத்தியில் மக்கள் மீன்களுடன் அமர்ந்து உணவருந்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 11 நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள ஒரு நதி கரையை உடைத்து, உணவகம் வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது முதல் இந்த உணவகம் இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது. மக்கள் மேசையில் அமர்ந்தபடி, நீரில் செல்லும் மீன்களுக்கு உணவு அளித்து மகிழ்கின்றனர். “மீன்களுக்கு மத்தியில் அமர்ந்து உணவருந்துவது ஒரு தனித்துவமான அனுபவம்” என வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.