சமூக ஊடகங்களில் வைரலாக வேண்டும் என்ற ஆசைக்காக நாம் செய்யும் சாகசங்கள், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தானதாகவும் மாறும் என்பதை நிரூபிக்கும் சம்பவம் பிலிப்பைன்ஸில் நடந்துள்ளது. உணவு வீடியோக்களுக்காக பிரபலமாக அறியப்படும் இன்ஃப்ளூயன்சர் ஒருவர், விஷமுள்ள நண்டை சாப்பிட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளார். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 51 வயதானவர் ஃபுட் வலாகர் எம்மா அமித், தனது சமூக ஊடக வீடியோக்காக கடற்கரை அருகிலுள்ள மாங்க்ரோவ் பகுதியில் இருந்து கடல் உயிரினங்களை சேகரித்தார்.