இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பெரிதும் உயர்ந்துள்ளன. அடெக்கோ இந்தியா என்ற நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவின் பண்டிகை காலத்தில் வேலைவாப்பு 17 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தற்காலிக வேலைகள் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ரீட்டெயில், இ-காமர்ஸ், வங்கி சேவைகள், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி போன்ற துறைகளில் தற்காலிக பணியாளர்களின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.பணியாளர்களின் ஊதியமும் உயர்ந்துள்ளது.