மத்திய பிரதேசத்தில் அறிமுகமான carbide gun எனப்படும் புதிய ரக தீபாவளி துப்பாக்கியால், கடந்த 3 நாட்களில் மட்டும் 122 குழந்தைகள் தீவிர கண் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 14 குழந்தைகள் கண்பார்வையை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கியை வெடிக்க வைக்க கால்சியம் கார்பைட் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரசாயனத்தை தண்ணீருடன் கலந்து வெடிக்கும் வகையில் அந்த துப்பாக்கி வடிவமைக்கப்பட்டதாக தெரிகிறது. அவ்வாறு கால்சியம் கார்பைட் ரசாயனத்துடன் தண்ணீர் கலக்கும்போது, அசிட்டிலின் என்ற வாயு வெளியாகியுள்ளது. இந்த வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குழந்தைகளுக்கு கண்பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.