எப்போதும் எதிர்பாராத சில சிறிய உதவிகள் இணையத்தில் வைரலாகிவிடும். அந்த வகையில், பெங்களூருவில் ஒரு பெண் பதிவிட்ட இந்த வீடியோவிற்கு ஆயிரக்கணக்கான பயனர்கள் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். Instagram இன்ஃப்ளூயன்சர் யோகிதா தனது பணியை முடித்தபின் ஒரு கேபில் ஏறியுள்ளார். அப்போது அவர் மிகவும் சோர்வாகவும் பசியுடன் இருப்பதாகவும் தனது நண்பரிடம் தொலைபேசியில் பகிர்ந்து பேசினார். பேசிக்கொண்டிருக்கும்போது அவர் மனம் உடைந்து கதறி அழுதார்.