உத்தரப்பிரதேச மாநிலத்தின் மெஹோபா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம், மனிதநேயத்தை உலுக்கும் ஒரு கொடூர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 70 வயதான ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் ஓம்பிரகாஷ் சிங் ரத்தோர் மற்றும் அவரது மனநலம் பாதிக்கப்பட்ட 27 வயது மகள் ரஷ்மி ஆகியோர், கடந்த ஐந்து ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.