‘கோட் டூர் ஆஃப் இந்தியா 2025’ நிகழ்ச்சிக்காக கால்பந்து நாயகன் லயனல் மெஸ்சி இந்தியா வந்துள்ளார். கொல்கத்தாவில் இருக்கும் அவர், ஹைதராபாத், மும்பை, டெல்லிக்கும் வருகை தருகிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு டிசம்பர் 15ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்படுகிறார். 13 ஆம் தேதி காலை 9:30 முதல் கொல்கத்தாவில் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. ஹைதராபாதின் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 7v7 கால்பந்து போட்டியிலும் மெஸ்சி கலந்துகொள்ள உள்ளார்.