ரஷ்யாவில் ஒரு வியப்பூட்டும் சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு தொழிற்சாலை ஊழியர் தன் வங்கிக் கணக்கை பார்த்தபோது, அதில், வழக்கத்தை விட நூற்றுக்கணக்கான மடங்கு பணம் இருந்துள்ளது. அவருக்கு மாத சம்பளம் சுமார் 46,000 ரூபிள்ஸ் என கூறப்படும் நிலையில், அவரது வங்கி செயலியில் பார்த்தபோது, 7 மில்லியன் ரூபிள்ஸ் இருந்திருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில், சுமார் 87 லட்சம் இருந்திருக்கிறது. ஒருவேளை நமக்கு போனஸ் போட்டிருப்பார்களோ என அவர் நினைக்க, அப்போது தான் அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருந்து போன் வந்திருக்கிறது. அதாவது 34 ஊழியர்களின் சம்பளம் அவரது கணக்கில் தவறுதலாக அனுப்பப்பட்டிருக்கிறது