ரஷ்யாவின் அரச குடும்பத்திற்காக புரட்சிக்கு முன்பு உருவாக்கப்பட்ட, மிக அரிய கிரிஸ்டல் மற்றும் வைரங்கள் பொருத்தப்பட்ட ஃபாபர்ஜே முட்டை விரைவில் ஏலத்திற்கு வர உள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயின் படி, ரூபாய் 236 கோடியாகும். இதுகுறித்து கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் தெரிவித்ததாவது, “விண்டர் எக்” என்ற இந்த கலைப்பொருள், தனியாரின் பொறுப்பில் இருக்கும் ஏழு ஃபாபர்ஜே முட்டைகளில் ஒன்றாகும். இது வரும் செவ்வாய்க்கிழமை லண்டன் கிறிஸ்டீஸ் தலைமையகத்தில் ஏலத்திற்கு வரவுள்ளது. 4 அங்குலம் உயரம் கொண்ட இந்த முட்டை, மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட ராக்-கிரிஸ்டலால் உருவாக்கப்பட்டதாகும்.