அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற, டெஸ்லா பங்குதாரர் கூட்டத்தில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான சம்பள ஒப்பந்தம், எலான் மஸ்க்கிற்காக அங்கீகரிக்கப்பட்டது. சிஎன்என் வெளியிட்ட தகவலின்படி, மஸ்க்கின் புதிய பங்குகள் அடிப்படையிலான, சம்பளம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது டெஸ்லா நிறுவனம், அதன் நீண்டகால வளர்ச்சி இலக்கை அடைந்தால், மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக மாறக் கூடிய வாய்ப்பை உருவாக்கும்.