2027 ஆகஸ்ட் 2 ஆம் தேதி, இந்த நூற்றாண்டின், மிக நீண்ட சூரிய கிரகணமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் உலகமே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கப்போகிறது. இந்த நாளில், நிலா, சூரியனை முழுவதும் மறைக்கும். சில நிமிடங்களில், பகல் இருளாகி விடும். சூரியனை சுற்றிலும், ஒரு வெள்ளை வளையம் போலத் தெரியும்.