தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, தங்களது ஆண்டிலியா வீட்டிற்கான பொருட்கள் வாங்குவதற்காக ஸ்ரீலங்காவுக்கு தனது தனி விமானத்தில் பயணித்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. உலகில் பெரும் பணக்காரரை திருமணம் செய்த அவர், பக்கிங்கம் பேலஸை தொடர்ந்து உலகின் இரண்டாவது ஆடம்பரமான வீட்டில் வசித்து வருகிறார். நாற்பது மாடி கட்டடம் கொண்ட அவரது வீட்டில் நூற்றி எழுபது கார்கள் உள்ளன. அதோடு, அந்த வீட்டில் மிகப்பெரிய விருந்துக்கூடங்களும், தோட்டங்களும், தியான மையங்களும் உள்ளன. இப்படிப்பட்ட வீட்டை அலங்கரிக்க நிதா அம்பானி, கடந்த இரண்டாயிரத்தி பத்தில், தனி விமானம் மூலம் மும்பையிலிருந்து ஸ்ரீலங்கா சென்று அங்கிருந்து நோரிடேக் என்ற நிறுவனத்தின் இருபத்தி ஆயிரம் சமயலறை பொருட்களை வாங்கியதாக அறிக்கைகள் கூறுகின்றன.