டெல்லியை தளமாகக் கொண்டு செயல்படும் எலைட் மார்க் பிஆர் நிறுவனம், ஊழியர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தீபாவளிக்கு ஒன்பது நாள் விடுமுறை அளித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அலுவலகங்களில் பண்டிகை காலங்களில் போனஸ், இனிப்புகள் வழங்குவதை விட இப்பொதெல்லாம் லீவு வழங்குவதே மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறி விட்டது.