வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு, 25 வயதான கமல் தியானி தனது இரட்டைய சகோதரருக்கு அழைத்து, “10 நிமிடங்களில் வீட்டுக்கு வருவேன்” என கூறினார். பெற்றோரின் திருமண நாளைக் கொண்டாடுவதற்காகவே அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டில் கேக் வெட்டப்படாமல் மேசையில் காத்திருந்தது. ஆனால் 30 நிமிடங்கள் கடந்தும் கமல் வீடு திரும்பவில்லை. தொடர்ந்த அழைப்புகளுக்கு பதில் இல்லாததால், பெற்றோர் பதறி அவரைத் தேடி வெளியேறினர்.