மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் தன்னை தாக்க வந்த சிறுத்தையை தைரியமாக எதிர்கொண்டான். தனது நண்பனின் உதவியுடன் கற்களை எறிந்தும், அங்கு இருந்த எச்சரிக்கை மணியை உடனடியாக அடித்தும் அந்த சிறுத்தையை எதிர்த்து போராடினான். இதனால் அந்த சிறுத்தை வேறு வழியின்றி மீண்டும் காட்டுக்குள் சென்றது.