சொமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல், சமீபத்தில் நடந்த உலகளாவிய உணவு மற்றும் தொழில்நுட்ப மாநாட்டில் பேசும்போது, சொமேட்டோவில் அடிக்கடி சந்திக்கும் சில பொதுவான மோசடி முயற்சிகளைப் பற்றி பகிர்ந்துள்ளார். வாடிக்கையாளர்கள் சில நேரங்களில் ஆஃபர் ப்ரோமோ கோடுகளை தவறாக பயன்படுத்த முயற்சிப்பதை தீபிந்தர் குறிப்பிடுகிறார். உதாரணமாக, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒரு கூப்பனை மறுபடியும் பயன்படுத்த முயல்வது அல்லது கண்டிப்பாக கொடுக்கப்பட்ட சலுகையை மீறி பயன்படுத்த முயல்வது.