கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என தமிழக வெற்றிக்கழகத்தினர் குற்றம்சாட்டிய நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த வக்கீல் அணியினர் மதுரை ஐகோர்ட்டின் விடுமுறை கால நீதிபதி தண்டபாணியிடம் முறையிட்டனர். இந்த வழக்கு செப்டம்பர் 29ம் தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.